"மாட்டுனா மட்டனு... சிக்குனா சிக்கனு!".. பாட்டு, டான்ஸ்னு பட்டையை கிளப்பும் சிவாங்கி! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிகரமான விருது வழங்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து செலிபிரிட்டி ஸ்டார் சிங்கர் 2021  நிகழ்ச்சியை behindwoods முன்னெடுத்துள்ளது.

Sivaangi singing dance behindwoods celebrity star singer 2021
Advertising
>
Advertising

முன்னணி டெலிவிஷன் பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் விஜய் தொடர்களின் நட்சத்திரங்கள், பாடகர்கள், காமெடி பிரபலங்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை விஜே நிக்கி விஜே விஜய், குரேஷி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

Sivaangi singing dance behindwoods celebrity star singer 2021

இந்நிகழ்ச்சியில் சிவாங்கி முக்கிய ஸ்டாராக கலந்து கொண்டார். கலந்துகொண்டதுடன் பாட்டு, டான்ஸ், பெர்ஃபார்மென்ஸ் என சிவாங்கி தெறிவிக்கவிட்ட தருணங்கள் அடங்கிய செலிபிரிட்டி ஸ்டார் சிங்கர் 2021 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Sivaangi singing dance behindwoods celebrity star singer 2021

விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் சிவாங்கி தற்போது டான், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்களில் சிவாங்கி நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் செலிபிரிட்டி ஸ்டார் சிங்கர் 2021 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவாங்கி, விஜே விஜய்யுடன் இணைந்து கானா பாடலை அவர் லெவலுக்கு இறங்கி அடிக்கிறார். குறிப்பாக குறும்புக்கே சொந்தக் காரரான சிவாங்கி, சுனிதவுடன் இணைந்து பெர்ஃபார்மென்ஸ் செய்யும் அசாரை கலாய்க்கவும் செய்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரான கிரேஸ் கருணாஸ் நடுவராக வீற்றிருப்பதை காண முடிகிறது. அவருடைய மகன் கென் கருணாஸூம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியும், டிரம்ஸ் வாசித்தும் அசத்தினார். முன்னதாக கென் கருணாஸ் வாடா ராசா எனும் ஆல்பம் பாடலை பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் ஹிஸ்டரியில் முதல் முறையாக  செலிபிரிட்டி ஸ்டார் சிங்கர் 2021 நிகழ்ச்சியை பிஹைண்ட்வுட்ஸ் பிரத்தியேகமாக வழங்குகிறது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழன் மாலை 3.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோக்கள் BEHINDWOODS TV தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

"மாட்டுனா மட்டனு... சிக்குனா சிக்கனு!".. பாட்டு, டான்ஸ்னு பட்டையை கிளப்பும் சிவாங்கி! வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi singing dance behindwoods celebrity star singer 2021

People looking for online information on Behindwods shows, Behindwoods, Behindwoods Awards, Behindwoods Gold Medals, Celebrity singer 2021, Dance, Digital reality show, Music, Singing, Sivaangi, Sivaangi Singer will find this news story useful.