"அஸ்வினே".. BEHINDWOODS கோல்டு டெலிவிஷன் விருது.. சிவாங்கியின் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

7 வருட வெற்றிகரமான Behindwoods Gold Medals விருது விழாவைத் தொடர்ந்து Behindwoods தொடர்ந்த மற்றுமொரு முன்னெடுப்புதான் Behindwoods Gold Icons டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 7-ஆம் தேதி வழங்கியது.

விஜய் டிவி புகழ், மணிமேகலை தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் புகழ்பெற்ற பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ரியாலிட்டி டெலிவிஷனின் மோஸ்ட் பாப்புலர் ஆடவருக்கான விருதினை அஸ்வினும், குக் வித் கோமாளி ரியாலிட்டி டெலிவிஷன் ஷோவுக்கான மோஸ்ட் பாப்புலர் பிரபல பெண்ணுக்கான விருதினை சிவாங்கியும் பெற்றுள்ளனர்.

இந்த விருதினை அஸ்வினின் கையால் பெற்ற சிவாங்கி தமது இன்ஸ்டாகிராமில், “இந்த விருதினை உங்கள் கையால் வாங்குவது ஸ்பெஷல் , நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நபர் நீங்கள்.

 

இன்னும் பல உயரத்தை தொடுவதற்கும், இந்த விருதினை பெற்றதற்காகவும் வாழ்த்துக்கள் அஸ்வினே . நன்றி மக்களே.. நீங்க இல்லாம, நாங்க யாருமே இல்ல. உங்க ஆதரவுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi post about Behindwoods award from ashwin viral சிவாங்கி

People looking for online information on Ashwin, BehindwoodsGoldIcons, CookWithComali, Sivaangi, TelevisionDigitalAndSocialAwards will find this news story useful.