விஜய் டிவி மூலம பிரபலமான நடிகர் கவின். கவின், நடிகை தேஜூ அஸ்வினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வீடியோ ஆல்பம் பாடல் அஸ்கு மாரோ பாடல்.

சாண்டி மாஸ்டரின் நடனப்பயிற்சியில் உருவான இந்த பாடல் ஒரு பப் செட்டப்பில் செம்ம ஜாலியாகவும் காதலுடனும் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இந்த பாடல் கவின் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. யூடியூபில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த பாடல் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.
அத்துடன் சிவாங்கி ரசிகர்களிடையேயும் இந்த பாடல் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் சிவாங்கி இந்த பாடலை பாடியதுடன் இந்த பாடலின் வீடியோவில் சிவாங்கி நடித்துள்ளதும் தான். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக பிரபலமான சிவாங்கி, அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி ஷோவின் மூலம் இன்னும் பிரபலமானார். தரண்குமார் இசையில் இந்த பாடலை சிவாங்கி பாடியுள்ளார். இந்நிலையில் சிவாங்கி இந்த பாடலை பாடும்போது நடந்த க்யூட்டான சொதப்பல் தருணங்கள் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளன.
அதில் சிவாங்கி, பாடலை பாடிவிட்டு சொதப்புகிறார். சில முக பாவனைகளை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும் உள்ளது. சிவாங்கியின் இந்த இயல்பு தான் சிவாங்கியின் ரசிகர்களிடையே அவரை கொண்டு சென்று சேர்த்ததாக பலரும் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் செய்துள்ளனர். தற்போது சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடிக்கிறார்.
ALSO READ: நடிகர் ரஜினிகாந்த்துக்கு 'இந்திய அரசின்' உயரிய விருது! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!