முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் PHOTO-வை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..😍!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

Advertising
>
Advertising

Also Read | அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா.. புதிய தோற்றத்தில் தனது PHOTO-வை வெளியிட்டு பதிவு!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

"டான்" படத்துக்கு பின்,  இயக்குனர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்   தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது.

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு காது குத்தி மொட்டை போட சொந்த ஊரான திருவீழிமிழலைக்கு குடும்பத்துடன் வந்து மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த வீடியோ & புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தன.

இந்த காதணி விழாவில் நடிகர் சூரி மற்றும்  இசையமைப்பாளர் இமான் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகன் குகன் தாஸின் முகம் தெரியும் போட்டோவை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | துணிவு & வாரிசு படங்கள் குறித்து ட்வீட் செய்த LEGEND சரவணன்.. TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Siva Karthikeyan Son Face Photo Revealed in Family Pongal Celebration

People looking for online information on Pongal Celebration, Sivakarthikeyan, SivaKarthikeyan Son Photo will find this news story useful.