#SK20 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் வெளிநாட்டு நடிகை! இவங்க தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: காரைக்குடி: சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

கண்ணாடி முன்னாடி திவ்ய பாரதியின் அசத்தல் நடனம்! வைரலாகும் செம வீடியோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியானது.

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மார்ச் 25, 2022 அன்று டான் படம் ரிலீசாக உள்ளது.

சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக சமீபத்திய புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் கடந்த 10.02.2022 முதல் துவங்கி உள்ளது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இங்கிலாந்து நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே RRR படத்தில் ஜெனிபர் பாத்திரத்தில் நடித்தவர்.

இந்த படத்தில் கேமரா மேனாக மனோஜ் பரமஹம்சா பணிபுரிய உள்ளார். இவர் ஏற்கனவே நண்பன், ராதே ஷ்யாம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை ஒளிப்பதிவு செய்தவர். தற்போது பீஸ்ட் படத்தில் பணிபுரிந்துள்ளார். நடிகர் பிரேம்ஜி அமரன் பிப்ரவரி 13 அன்று படக்குழுவுடன் இணைய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நடிக்காத கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்! வெளியான மிரட்டல் FIRST LOOK

தொடர்புடைய இணைப்புகள்

Siva Karthikeyan SK20 Heroine RRR Actress Olivia Morris

People looking for online information on சிவகார்த்திகேயன், Heroine, I, RRR Actress Olivia Morris, Siva Karthikeyan, SK20 will find this news story useful.