BREAKING: சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'.. பிரபல OTT-யில் ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE' படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த தகவல் பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "புயல் அடிக்க போகுது".. ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்'.. அதிரடியான தமிழ் டீஸர்!

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில்  கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ப்ரின்ஸ்'.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்தனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். சத்யராஜ் & பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரின்ஸ் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | BREAKING: 'கடைசி விவசாயி' இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி? OTT ரிலீஸா? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Siva Karthikeyan Prince streaming on November 25th on Hotstar Sources

People looking for online information on Hotstar, OTT Release, Prince, Sivakarthikeyan, SivaKarthikeyan Prince will find this news story useful.