LATEST: சிவகார்த்திக்கேயன் நடிக்கும் 'டான்' படத்தின் புதிய அப்டேட்! வைரலாகும் BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயலான்', 'டாக்டர்' படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'.

இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது.

இந்நிலையில் படக்குழு ஒரு காதல் பாடல் காட்சியை படமாக்க ஆக்ரா தாஜ்மஹால் சென்றுள்ளது. இதனை படத்தில் பணிபுரியும் உதவி நடன இயக்குனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த பாடல் அனிருத் இசையில் பிருந்தா மாஸ்டர் நடன இயக்கத்தில் உருவாகிறது.

'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Siva karthikeyan don movie latest update on shooting

People looking for online information on Don, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.