"நீங்க என்னோட ஹீரோ"..தாத்தாவின் மறைவு பற்றி மகேஷ்பாபு மகள் நெகிழ்ச்சி பதிவு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.

Advertising
>
Advertising

Also Read | பிரபல STYLIST-வுடன் விக்னேஷ் சிவன் & நயன்தாரா.. இணையத்தை கலக்கும் CUTE செல்ஃபி போட்டோஸ்!

இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

80 வயதான கிருஷ்ணா, இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.

கிருஷ்ணா நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1980-களில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யானார். பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து முழுவதும் விலகினார்.

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணமடைந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல சினிமா பிரபலங்கள் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில், "நீங்கள் எனக்கு பல மதிப்புமிக்க விஷயங்களைக் கற்றுக் கொடுத்தீர்கள்... எப்போதும் என்னை சிரிக்க வைத்தீர்கள் 😔 இப்போது எஞ்சியிருப்பது உங்கள் நினைவு மட்டுமே. நீங்கள் தான் என் ஹீரோ... என்றாவது ஒரு நாள் உன்னை பெருமைப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். நான் உங்களை மிகவும் மிஸ் செய்வேன் தாத்தா..." என நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

Also Read | BREAKING: வாரிசு படத்தின் நெல்லை & குமரி ஏரியா உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

"நீங்க என்னோட ஹீரோ"..தாத்தாவின் மறைவு பற்றி மகேஷ்பாபு மகள் நெகிழ்ச்சி பதிவு.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sitara Ghattamaneni Instagram Post about Super Star Krishna

People looking for online information on Krishna Ghattamnaneni, Mahesh Babu, Mahesh Babu father, Mahesh Babu father Krishna Ghattamnaneni Passed away, Sitara Ghattamaneni will find this news story useful.