சீதா ராமம் படம் பிரபல இந்திய மொழியில் வெளியாக உள்ளது.
Also Read | நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்.. அவரே சொன்ன சூப்பர் தகவல்!
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ல் வெளியான 'சீதா ராமம்' உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் பாஸிட்டிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகமானது. மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை 'சீதா ராமம்' பெற்றது.
'சீதா ராமம்' உலகம் முழுவதும் 65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வார நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர்.
மேலும் 'சீதா ராமம்' திரைப்படம், இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப்படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.
காவிய காதல் கதையான 'சீதா ராமம்', போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்து வருகிறது.
இயக்குனர் ஹனுராகவபுடியின் எழுத்து மற்றும் இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் இசை... பி எஸ் வினோத்தின் ஒளிப்பதிவு..ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி, இந்தி மொழியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பென் மீடியா நிறுவனம் இந்தி உரிமத்தை கைப்பற்றி உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Also Read | பிரபல போட்டோகிராபர் உடன் இணைந்து போட்டோ ஷூட்.. Monochrome -ல் கலக்கிய மாளவிகா மோகனன்