ராமாக துல்கர் சல்மான் - சீதாவாக மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. செம ரொமான்டிக்கான CLASSIC டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் டீசர்  வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

இயக்குனர் ஹனு ராகவபுடி போர் பின்னணியில் இந்த காதல் கதையை உருவாக்கி வருகிறார். சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர்.

ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களை  கவர்ந்தது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த அந்த பாடல் ஹிட் ஆகியுள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் இன்று ஜூன் 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ரிலீசாகி உள்ளது. முன்னோட்ட காட்சியில் துல்கர் மற்றும் மிருணாள் இடையேயான காதல் கெமிஸ்ட்ரி இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1965 காலகட்டத்தில் படம் நடப்பதாக களம் அமைக்கப்பட்டுள்ளது.

டீசரில் ஒளிப்பதிவு, பின்னணி இசை & எடிட்டிங் ஆகியவை தற்போது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. டீசரில் கதாநாயகி மிருணாள் தாகூர் அறிமுகம் ஆகும் இடம் உச்சக்கட்ட அழகியலுடன் அமைந்துள்ளது. 

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

ராமாக துல்கர் சல்மான் - சீதாவாக மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. செம ரொமான்டிக்கான CLASSIC டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sita Ramam Teaser Dulquer Salmaan Mrunal Thakur

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Sita Ramam, Sita Ramam Teaser will find this news story useful.