இது தெரியாம போச்சே!.. 'சிறுத்தை' பாவுஜியின் மனைவிதான் இந்த 'ஜேஜே'.. 'கேஜிஎஃப்' பட நடிகையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிவா சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் 2011 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா, சந்தானம் நடிப்பில் இயக்குனர் சிவா கொடுத்த சிறுத்தை என்கிற ஹிட் படம்தான்.

Siruthai villain Avinash wife is KGF actress Malavika

தெலுங்கு & தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த இந்த திரைப்படம் பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாகுபலி திரைப்படத்தை இயக்கிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இந்த கதையை எழுதியிருந்தார்.

Siruthai villain Avinash wife is KGF actress Malavika

வித்யாசாகர் இசையில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர்தான் அவினாஷ். இவர் சிறுத்தை திரைப்படத்தில் பாவுஜி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடன் சந்தானத்துக்கு காமெடி காட்சிகளும், கார்த்திக்கு கொஞ்சம் சீரியஸான காட்சிகளும் இருக்கும்.

Siruthai villain Avinash wife is KGF actress Malavika

வில்லனாகவும், நகைச்சுவை காட்சிகளில் இணைந்து ஒத்துழைப்பு தந்தும் நடித்திருந்த பாவுஜி அவினாஷ் அடிப்படையில் ஒரு கன்னடத் திரைப்பட நடிகர். தமிழில் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரியராக தோன்றி அசாத்தியமான நடிப்பை கொடுத்திருப்பார்.

இதேபோல் பரமசிவம் திரைப்படத்தில் டிஜிபியாகவும் வலம் வருவார். தவிர, அஜித் நடித்த வீரம், வேதாளம், என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருப்பார்.

இந்த அவினாஷின் மனைவிதான் மாளவிகா அவினாஷ். இவர் தமிழில் டிஷ்யூம், ஆதி, கள்வனின் காதலி, ஜெயம்கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிகப்படியான கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் அண்மையில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த கேஜிஎஃப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து 2022 ஏப்ரல் மாதம் வெளியாகவிருப்பதாக கூறப்பட்டிருக்கும் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திலும் தீபா என்கிற அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதொடர்பான டப்பிங் பணியில் இருப்பதாக அண்மையில் அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது அரசியலிலும் ஆர்வத்துடன் செயலாற்றி வரும் இவர், இவைதவிர தமிழில் விஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா அவினாஷ், கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் நளினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதேபோல் சீரியல்களைப் பொறுத்தவரை சன் டி.வியின் பழைய சீரியலான சின்ன சின்ன ஆசை - உறவு மற்றும் அண்ணி உள்ளிட்ட சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதேபோல் அரசி, அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இறப்பு காட்சியில் நடித்த நடிகை!.. ‘டூப்பாக பொம்மை!’.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் குழுவினர் செய்த பரிகார சடங்கு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Siruthai villain Avinash wife is KGF actress Malavika

People looking for online information on Avinash, Karthi, KGF, Kgf 2, Malavika Avinash, Prashanth Neel, Siruthai, Siruthai Avinash, Yash will find this news story useful.