சர்ப்ரைஸ் கொடுத்த சீரியல் பிரபலங்கள்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு.. இவங்களா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Varisu : சக்ஸஸ் மீட்டில் விஜய்யின் 'வாரிசு' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி உருக்கம்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் மற்றும் நாயகி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். வீட்டுக்குள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் பாரம்பரிய உடையில் வலம் வரும் நிலையில் உள்ளே வந்திருக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா ஆகிய இருவரும் போட்டியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து. தங்களுடைய புதிய தொடர் பற்றி இருவரும் பேச, போட்டியாளர்கள் அனைவரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் இருவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். முன்னதாக, வீட்டுக்குள் தொகுப்பாளர் DD, மகாநதி தொடரை சேர்ந்த நடிகர் சரவணன் மற்றும் சுஜாதா உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில், தற்போது சீரியல் பிரபலங்கள் வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா ஆகியோர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இதெல்லாம் தூக்கி எறியனும் சார்".. Fire-ஆன விக்ரமனின் பேச்சு.. கடைசியில கமல் வச்ச ட்விஸ்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Siragadikka Aasai serial crew enters into BiggBoss House

People looking for online information on Bigg boss 6 tamil, Biggboss House, Siragadikka Aasai serial will find this news story useful.