சித் ஶ்ரீராம் போல அப்படியே பாடி அசத்திய குருமூர்த்தி..! பாராட்டுக்களை குவிக்கும் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் திருமூர்த்தி பாடியுள்ள சித் ஶ்ரீராமின் பாடல் பாராட்டுக்களை குவித்து வைரல் ஆகி வருகிறது. 

சமூக வலைதளத்தில் அஜித்தின் விஸ்வாசம் பாடலை பாடி வைரல் ஆனவர் பாடகர் திருமூர்த்தி. இவரின் வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் இமான், திருமூர்த்திக்கு அவர் இசையமைத்த சீறு படத்தில், ஒரு பாடலை பாடும் வாய்ப்பை கொடுத்தார். இதை தொடர்ந்து திருமூர்த்தி தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது இவர் பாடியுள்ள பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தில் பாடகர் சித் ஶ்ரீராம் பாடிய 'என்னை மாற்றும் காதலே..' பாடலை, அப்படியே அவரை போலவே பாடி அசத்தியுள்ளார் திருமூர்த்தி. இதை தொடர்ந்து இந்த வீடியோவை எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன், பார்த்திபன் உள்ளிட்டோர் பாராட்டியிருப்பதுடன், இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சித் ஶ்ரீராம் பாடலை பாடிய திருமூர்த்தி | Singer Thirumoorthy sings sid sriram song and goes viral

People looking for online information on Anirudh, Naanum Rowdy Dhaan, Sid Sriram, Singer Thirumoorthy will find this news story useful.