அரக்கோணத்தை சார்ந்த 'தெருக்குரல்' அறிவு, ராப் பாடல் இசைக்கலைஞர் மற்றும் சினிமா பாடலாசிரியராக பிரபலமானவர்.
Also Read | அஜித்குமாரின் 'துணிவு'.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OTT- ரிலீஸ் எப்போ? எதுல? முழு விவரம்
தமிழ்நாட்டின் பட்டி தொட்டி முதல் வெளிநாட்டுப் பெரு நகரங்கள் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல், 'எஞ்சாய் எஞ்சாமி'. இதன் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு ஆவார். ஆதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடலாக இப்பாடலை அறிவு உருவாக்கி இருந்தார். உலகமெல்லாம் இருக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலில் வரும் வள்ளியம்மாள் ‘தெருக்குரல்’ அறிவின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியிட, இப்பாடல் பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. உலகமெங்கும் ஹிட் அடித்த இந்த பாடல் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது.
இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் 'வாத்தி ரெய்டு' பாடல், வலிமை படத்தில் இடம்பெற்ற தீம் பாடல், மாநாடு படத்தின் வாய்ஸ் ஆப் யூனிட்டி, அண்ணாத்த படத்தின் தீம் பாடல், சூரரை போற்று படத்தின் தீம் பாடல் என பல பாடல்களை அறிவு எழுதி பாடியுள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அறிவு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தளபதி 67 படத்தில் பணிபுரிவது குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் எதிர்பார்க்கலாமா?" என்ற கேள்விக்கு "எனக்கு தெரியலை படக்குழுவினர் தான் சொல்லனும்" என அறிவு பதில் அளித்தார்.
Also Read | சிம்பு பிறந்தநாளுக்கு A.R. ரஹ்மானின் ட்ரீட்.. 'பத்து தல' 1st சிங்கிள் 'நம்ம சத்தம்' ரிலீஸ்!