பாடகர் எஸ்.பி.பியுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் குறித்து மருத்துவர் தீபக் சுப்பிரமணியம் மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.
இந்நிலையில் தற்போது எஸ்.பி.பியின் மருத்துவர் அவருடனான நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர், ''எனது வழக்கமான நேரங்களில் இருந்து, எஸ்.பி.பி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை. எனக்கு மிகவும் பிடித்தமான பாடகருடன் இருந்த நேரங்களை மறக்கமுடியாது. எனது கல்லூரி காலங்களில், நான் அவர் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், என்னை ஸ்பெஷல் பேஷன்ட் போல நடத்தாதீர்கள். எல்லோரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார். மேலும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம் எல்லாம் மிகவும் க்ளோஸ் ஆகிவிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அடங்கிய முழு வீடியோ தொகுப்பு இதோ.