''அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும்..?" - மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPB.. வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்ற கேள்விக்கு எஸ்.பி.பி பதிலளித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. அடுத்த ஜென்மத்தில் பாடகராக பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? என்று நடிகை குஷ்பூ கேட்ட கேள்விக்க, மிகுந்த ஆர்வத்துடன் ஆமாம் என்று பதிலளிக்கிறார் எஸ்.பி.பி. அவர் மறைவின் சொகத்தில் இருந்து ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது இந்த வீடியோ. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பியின் கடைசி ஆசை | Singer SPB's answer on his re birth goes viral

People looking for online information on Khushboo, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.