பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று திருவள்ளூர் என்று அழைக்கப்படும் மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். பின்பு நெல்லூரில் வளர்க்கப்பட்டார். அவருக்கு இரு சகோதரர்களும், ஐந்து சகோதரிகளும் உண்டு. சிறு வயதிலேயே இசையின் மீது இசையின் மீது ஆர்வம் இவருக்கு ஒட்டிக்கொண்டது.
அனந்தபூர் இன்ஜினியரிங் கல்லூரியில் தனது இன்ஜினியரிங் படிப்பை தொடங்கியவர் டைபாய்டு ஜுரம் காரணமாக அங்கிருந்து படிப்பை நிறுத்திவிட்டு, பின்பு சென்னையின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியரிங்கில் உறுப்பினராக சேர்ந்து விட்டார். பொறியியல் படிப்பின் போதே பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவிக்கத் தொடங்கினார். எஸ்.பி.பி-யின் முதல் பாடலான "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற அந்த பாடல் மெகா ஹிட் அடித்தது உலகம் அறிந்த விஷயம்.
நம் தலைமுறை கண்ட மிகப்பெரிய சகாப்தம் ஒன்று இன்றுடன் முடிந்துள்ளது. எஸ் பி பாலசுப்பிரமணியம் பற்றி பற்றி எழுதுவதற்கு இந்த சிறிய கட்டுரை போதாது. 1946-ஆம் ஆண்டு பிறந்த எஸ்பிபி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நம் செவிகளுக்கு இசை மழையை வழங்கியவர். அவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார். மேலும் 40 ஆயிரம் பாடல்களை பாடிய ஒரே பெருமை உடைய பாடகர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளார். ஆறு முறை தேசிய விருது வென்ற இவர், மேலும் இந்திய நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
அவரது இறப்பு செய்தி அவரது ரசிகர்களை மீள முடியா துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கலைத்தாயின் மூத்த மகனான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் அவரது இசை மூலம் உலகம் முடியும் வரை நம் அனைவரோடும் கலந்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.