'ஸ்ரேயா கோஷல் சொன்ன சந்தோஷ செய்தி!'.. வாழ்த்து கூறிவரும் இசை ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். தேசிய விருது, கேரளா மற்றும் தமிழ் நாடு அரசு விருதுகள் என பல விருதுகள் என பல விருதுகளை வென்று இந்திய அளவில் புகழ் பெற்றவர்.

பெங்காலி குடும்பத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் தமிழில் விருமாண்டி படத்தில் உன்னை விட, தாஸ் படத்தில் சாமி கிட்ட சொல்லிபுட்டேன், சில்லுனு ஒரு காதல் படத்தில் முன்பே வா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் மன்னிப்பாயா, மெர்சல் படத்தில் நீதானே என பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார். 

இசையை தொடர்ந்து கேட்பவர்களின் ப்ளே லிஸ்டில் நிச்சயம் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான ஸ்ரேஷா கோஷல் தற்போது தான் கர்ப்பம் தரித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரேயாதித்யா என்கிற தங்களது குழந்தை இந்த பூமிக்கு வரவுள்ளதாகவும், இதைப் பகிர்வதில் தானும் தன் கணவர் ஷிலாதித்யாவும் மகிழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: வாவ்.. கெட்டப் எல்லாம் வேற லெவல்ல இருக்கே.. 'நவரசா'வில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, சித்தார்த் நடித்த காட்சிகள்.. Trending Photos!

தொடர்புடைய இணைப்புகள்

Singer shreya goshal announce pregnancy பாடகர் ஷ்ரேயா கோஷல்

People looking for online information on Instagram, Shreya Goshal, Trending will find this news story useful.