நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருந்தது.
Also Read | VIDEO : தூங்குதா..? வாலைப் பிடித்த சந்தானம்.. புலி கொடுத்த ரியாக்ஷனில் ஜர்க் ஆயிட்டாப்ல!
நடிகர் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் அவரது பேச்சு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர். அப்படி ஒரு சூழலில், நடிகர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்த விஷயங்கள் பெரிய அளவில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 ஆம் தேதியன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில், ரஞ்சிதமே பாடலை வாரிசு படத்தில் பாடியுள்ள பாடகி மானசி, மேடையில் நடிகர் தளபதி விஜய்யுடன் ரஞ்சிதமே பாடலை பாடிய அனுபவம் குறித்து பேச முற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவரது மைக் திடீரென வேலை செய்யாமல் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த நொடியில் நடிகர் விஜய் உடனடியாக மேடையில் ஏறி வேறொரு மைக்கை அவர் கையில் கொடுத்துள்ளார். விஜய்யின் இந்த செயல், நிகழ்வு அரங்கத்தில் அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. மேலும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பியதை அடுத்து, இந்த விஷயம் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில், இசை நிகழ்ச்சியின் போது தனக்கு நடிகர் விஜய் உதவி செய்ததை எண்ணி பாடகி மானசி, நம்ப முடியாத வகையில் ரியாக்ட் செய்த விஷயம் அதிக கவனம் பெற்று வருகிறது. கார் ஒன்றிற்குள் இருக்கும் மானசி, "என்னால இத நம்பவே முடியலையே" என கூறியபட சிரித்துக் கொண்டே இருக்கிறார். அங்கே இருக்கும் அவரது தோழி ஒருவர், எல்லாரும் ஃபோட்டோக்கு போஸ் தான் கொடுப்பாங்க, அவரு வந்து மைக்கையே கொடுத்தாரு பாரு" என்றும் கூறுகிறார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பாடகி மானசி பகிர்ந்து மனம் உருகி போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | மனைவியுடன் வெளிநாட்டில்.. இது தல கிறிஸ்துமஸ்.. புதுமாப்பிள்ளை ஹரிஷ் கல்யாண்.. 😍