LOVE YOU-ண்ணா.. தளபதி விஜய் -யுடன் பிரபல பாடகர்.. வைரலாகும் 'வாரிசு' BTS ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கர்ப்பமாக இருந்ததன் நினைவாக வயிற்றுக்கு சிலை.. நடிகை நமீதா பகிர்ந்த வைரல் வீடியோ!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதாவின் கணவரும் பாடகருமான கிரிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில், "வாரிசுக்கு மிக்க நன்றி விஜய் அண்ணா. Love You ண்ணா" என பதிவிட்டுள்ளார். பாடகர் கிரிஷ் இயக்குனர் வம்சியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | விஜய் நடித்த 'வாரிசு'.. சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல TV நிறுவனம்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Singer Krish shared Varisu Vijay BTS Image

People looking for online information on Krish, Singer Krish, Varisu, Varisu Vijay BTS Image, Vijay will find this news story useful.