இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி… ரசிகர்கள் வாழ்த்து…VIRAL PICS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் தம்பதியினருக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளன.

Advertising
>
Advertising

Also Read | “அடுத்த பெரிய அறிவிப்பு… “எதிர்பார்ப்பை எகிற வைத்த வெங்கட் பிரபுவின் தூள் பறக்கும் பதிவு

சின்மயி

பிரபல பின்னணி பாடகியான சின்மயி, மிகச் சிறிய வயதில் இருந்தே திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் அறிமுகமான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ரஹ்மான் இசையில் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் அவருக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைப் பெற்றுத் தந்தது. திரைப்படங்களில் பின்னணி பாடுவது தவிர, இவர் பல நடிகைகளுக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.  இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான ‘96’ திரைப்படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியிருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு திரைப்பட நடிகர் ராகுலை திருமணம் செய்தார்.

MeToo

சமீபத்தில் உலகெங்கும் MeToo பிரச்சனை பெரிய அளவில் விவாதம் ஆனபோது இவர் தமிழ்நாட்டில் அதை ஒரு விவாதமாக்கினார். பல பாதிக்கப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டுகளை அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்திலும் வெளியிட்டு வந்தார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் ஒருசேர கிடைத்தன. இதனால் அவரை சுற்றி சர்ச்சைகள் வலம் வந்தன.

இரட்டையர்கள்…

இந்நிலையில் இப்போது சின்மயி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரட்டை ஆண்  குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதை அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இது சம்மந்தமான அவரது ட்வீட்டில் “திரிபாத் & ஷரவாஸ். எங்கள் என்றைக்குமான உலகத்தின் மையம்” என தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்த டிவீட்டுக்கு கீழ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

Also Read | விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘வர்ணம்’ … கவனம் ஈர்த்த குறும்படம் ரிலீஸ் update

தொடர்புடைய இணைப்புகள்

Singer chinmayi blessed with twins wishes

People looking for online information on சின்மயி, பாடகி சின்மயி, Chinmayi, Singer Chinmayi, Singer chinmayi blessed with twins will find this news story useful.