"நல்லவேளை வேலையவிட்டு தூக்குனிங்க.. ரொம்ப நன்றி".. மார்வெல் ஹீரோ போட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்வெல் ஹீரோவான சிமு லியு டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து தான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | வெந்து தணிந்தது காடு.. தலைவன் சிம்புவுக்கு வழிய விடு.. புதிய போஸ்டருடன் GVM கொடுத்த சூப்பர் Update!

சீனாவில் பிறந்து கனடாவில் வளர்ந்தவரான சிமு லியு, ஆரம்ப காலத்தில் டெலாய்ட் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்திருக்கிறார். உலக புகழ்பெற்ற மார்வெல் குழுமம் தயாரித்த 'Shang-Chi and the Legend of the Ten Rings' திரைப்படத்தின் மூலமாக சூப்பர் ஹரோவாக நடித்திருந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்திருக்கிறார்.

பணி நீக்கம்

10 ஆண்டுகளுக்கு முன்பாக டெலாய்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சிமு பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"பத்து ஆண்டுகளுக்கு முன்பு டெலாய்ட் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அலுவலகத்திற்கு என்னை அழைத்தார்கள். உடனடியாக என்னை வேலையை விட்டு நீக்குவதாக தெரிவித்தனர். அதன்பிறகு HR பிரிவை சேர்ந்த ஒரு பெண் அதிகாரி மற்றும் செக்யூரிட்டி என்னை வேறு ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். யாரும் என்னை கவனிக்கவில்லை. கண்ணீர் வராமல் இருக்க மிகவும் போராடினேன். என்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கான வேலை இல்லை

மேலும், கணக்காளர் பணி எனக்கானது இல்லை என அந்த நேரத்தில் தோன்றியதாகவும் வாழ்க்கை முடிந்துவிட்டது போல இருந்ததாகவும் சிமு குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்த அவருடைய மற்றொரு பதிவில்," பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 12 ஆம் தேதிதான் நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய சேமிப்பு எல்லாம் கரைந்தது. ஆனாலும் ஹாலிவுட்டிற்குள் நுழைய தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

தனது முன்னாள் முதலாளிக்கு நன்றி தெரிவித்திருந்த சிமு,"டொராண்டோவில் உள்ள டெலாய்ட் நிறுவனத்தின் பால் கிப்பன் மற்றும் பிற அதிகாரிகளுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நன்றி. என்னால் செய்ய நம்பிக்கை இல்லாததை நீங்கள் செய்தீர்கள். அதனாலே என்னுடைய வாழ்க்கை வேறுவிதமாக மாறியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிமுவின் இந்த பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | ”ஆக்ஷன் படம் எடுக்க class எடுத்திருக்கிறார்”… சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் செம்ம review!

 

Simu Liu recalls getting fired from Deloitte 10 years ago

People looking for online information on சிமு லியு, Deloitte, Marvel hero, Marvel hero Simu Liu, Simu Liu will find this news story useful.