"20 வருஷம் ஆயிடுச்சு.." தங்கை மோனலை நினைத்து கலங்கிய சிம்ரன்.. உடைந்து போன நெட்டிசன்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90'ஸ் காலகட்டத்தில் பலரின் ஃபேவரைட் நடிகையாக இருந்து, தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை சிம்ரன்.

Advertising
>
Advertising

Also Read | "வித்தியாசமான ஃபீலிங்.." BB-க்கு அப்புறம் முதல்முறை போனில் அழைத்த நிரூப்.. நெகிழ்ந்த அனிதா

கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்த சிம்ரன், தன்னுடைய நடிப்புத் திறன் மற்றும் நடனம் உள்ளிட்டவற்றால் ரசிகர்களையும் பெரிய அளவில் கட்டிப் போட்டிருந்தார்.

நடுவே சில ஆண்டுகள் தொடர்ந்து திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்து வந்த சிம்ரன், தற்போது மீண்டும் பல திரைப்படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சீமராஜா, பேட்ட, பாவ கதைகள், மஹான் உள்ளிட்ட சிம்ரன் நடித்த திரைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தகன், ராக்கெட்ரி, கேப்டன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட திரைப்படங்களும் சிம்ரன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ளது.

கலங்கி போன நெட்டிசன்கள்

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார் சிம்ரன். அந்த வகையில், தற்போது நடிகை சிம்ரன் போட்டுள்ள ட்வீட் ஒன்று, நெட்டிசன்கள் பலரையும் கலங்க வைத்துள்ளது. சிம்ரனின் தங்கையும், பிரபல நடிகையாகவும் இருந்த மோனல், கடந்த 2002 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்த முடிவு, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை உண்டு பண்ணி இருந்தது.

தங்கையின் மறைவால்,  சிம்ரனும் துவண்டு போனார். மேலும், மோனலின் முடிவும் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தொடர்ந்து, மோனல் மறைந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவருடன் இருக்கும்  புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்ரன்.

உருக்கத்துடன் குறிப்பிட்ட சிம்ரன்

மேலும், அதன் கேப்ஷனில், "என்னோடு நீ இப்போது இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால், எப்போதும் நாம் ஒன்றோடு ஒன்று கலந்து தான் இருப்போம் என்பது எனக்கு தெரியும். 20 வருடங்கள் கடந்தாலும், உன்னுடைய சிறு பகுதி எப்போதும் என்னுடன் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. நாங்கள் அனைவரும் உன்னை மிஸ் செய்கிறோம். மோனு, என்றென்றும்" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | ”இனிமே வாழ்க்கையே கடுமையாக மாறப்போகுது” – கர்ப்பகாலத்தில் கணவருக்காக உருகிய காஜல்!

தொடர்புடைய இணைப்புகள்

Simran tweet about sister monal make fans emotional

People looking for online information on Fans emotional, Monal, Simran, Simran tweet about sister will find this news story useful.