மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இலங்கை போர் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மாதவன் - சிம்ரன் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் படத்தின் மீதான எதிர்பர்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்ரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், 15 வருடங்களுக்கு பிறகு திரு வும் இந்திராவும், திரு மற்றும் திருமதி நம்பி நாராயணனாக மாறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.