பாபி சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்' உடன் இணைந்த பிரபல தெலுங்கு ஹீரோ..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Simha and Sandeep Madhav PAN Indian film Ravana Kalyanam launch
Advertising
>
Advertising

Also Read | யுவன் இசையில் 'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. எப்போ ரிலீஸ்? சூப்பர் அப்டேட்!

அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

Simha and Sandeep Madhav PAN Indian film Ravana Kalyanam launch

மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண்குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற 'ராவண கல்யாணம்' படத்தின் தொடக்க விழாவில், திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Also Read | ஜெயம் ரவியின் புதிய படத்தில் முதல்முறை கீர்த்தி சுரேஷ், அனுபமா..! வெளியான ஷூட் அப்டேட்..

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Simha and Sandeep Madhav PAN Indian film Ravana Kalyanam launch

People looking for online information on Bobby Simha, Ravana Kalyanam, Sandeep Madhav will find this news story useful.