விக்ரம் திரைப்படத்தின் பாடல் மற்றும் ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார்.
விக்ரம் Expectation…
கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸாக உள்ள படமாக விக்ரம் உருவாகியுள்ளது.
பிரம்மாண்டமான அடியோ வெளியீடு…
ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்ரம் படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
எனது குரு கமல்ஹாசன்…
இந்நிலையில் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு தனது திரைவாழ்க்கை குரு கமல்ஹாசன் என்று பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர் “ இப்போது எல்லோரும் பேன் இந்தியா படங்கள் என சொல்கிறார்கள். கமல் சார் மருதநாயகம் படத்தின் 5 நிமிட காட்சிகளை ரிலீஸ் பண்ணுங்க. கமல் சாரின் ‘கமல் 50’ நிகழ்வில் பேசக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது எனக்கு கமல் சாரை பற்றி பேசும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. என்னோட அப்பா என்னுடைய எனக்கு ஆஃப் ஸ்கிரீன் குரு என்றால், கமல் சார்தான் எனக்கு திரையில் குரு. மலையாளத்தில் பஹத் பாசில் என்றால் தமிழில் நமக்கு விஜய் சேதுபதிதான். அனிருத் எதைத் தொட்டாலும் ஹிட் என்கிறார்கள். ஆனால் அந்த ஹிட்டுக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும்” எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8