சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது.
Also Read | ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு!.. மாப்பிள்ளை இவர் தான்! வெளியான செம வைரல் போட்டோ!
மூவர் கூட்டணி…
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி மூன்றாவதாக ஒரு படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. முதலில் அந்த படத்துக்கு ’நதிகளில் நீராடும் சூரியன்’ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அதற்கு பதிலாக ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்ட புதிய படத்தை தொடங்கினர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடிகை ராதிகா சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகரான நீரஜ் மாதவ் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார்.
படப்பிடிப்பு…
இந்த படத்துக்கு கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக பாடல்கள் எழுதும் கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். முதல் முறையாக கௌதம், பிறருடைய கதையை இயக்குகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதன் பின்னர் மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
தாமரை வரிகளில் சிம்புவின் குரலில்…
படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை (மே 6) 6.30 மணிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பாடலாசிரியர் தாமரை எழுத்தில் உருவாகியுள்ள அந்த பாடல் “காலத்துக்கும் நீ வேணும்” என தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இன்ப அதிர்ச்சியாக இந்த பாடலை பாடியுள்ளது சிம்பு என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு இணைந்து ரக்ஷிதா சுரேஷ் இந்த பாடலைப் பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு பாடியிருப்பதால் இந்த பாடலுக்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8