"கொளுத்து பட்டாச"... சிம்பு படத்தின் மாஸ் அப்டேட்! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2015ல் விஜய் சந்தர் இயக்கத்தில் வெளியான 'வாலு', திரைப்படத்திற்கு பிறகு சிம்புவுடன் ஹன்சிகா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் 'மஹா'.

ஹாரர், சஸ்பென்ஸ், த்திரல்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஹன்சிகாவின்  50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 2 அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது. ஆம், மஹா படத்தின் பாடல் உரிமையை ஸ்டார் மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

ஜமீல் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைப்பில் தயாராகி இருக்கும் இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Simbu starring Maha movie latest update released

People looking for online information on Dhanshika, Simbu will find this news story useful.