BREAKING : சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல.. சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி.. செம தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக "பத்து தல" திரைப்படம் உருவாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் K L பணிபுரிகிறார். பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெல்லாரி, துங்கபத்திரை அணை, காரைக்குடி, கோவிலூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

Images are subject to © copyright to their respective owners

எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்

அதே போல, சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 03 ஆம் தேதியன்று சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு, பத்து தல படத்தின் முதல் சிங்கிளான நம்ம சத்தம் ரிலீஸ் ஆகி, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners

இதனைத் தொடர்ந்து, பத்து தல படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது. முழுக்க தாடியுடன் ஒரு கேங்ஸ்டர் லுக்கில் சிம்பு பத்து தல படத்தில் இருப்பது ரசிகர்களை இன்னும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

பத்து தல சாட்டிலைட் உரிமம்

இந்த நிலையில், பத்து தல படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் நமக்கு பிரத்யேகமாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன் படி, பத்து தல படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி சிறந்த தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அதிக விலைக்கு சாட்டிலைட் உரிமம் வாங்கப்பட்ட சிம்பு படமாக பத்து தல அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Pathu Thala satellite rights acquired by sun tv deets

People looking for online information on Pathu Thala, Satellite Rights, Silambarasan TR, Sun TV will find this news story useful.