"மறக்குமா நெஞ்சம்".. AR RAHMAN குரலில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் சிங்கிள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள நிலையில், கெளதம் - சிம்பு கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு முன்பு, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களில், இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ள நிலையில், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் முத்து என்னும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோக்கள், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருந்தது.

மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படம், செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஏற்கனவே, காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடல், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி இருந்த நிலையில், இதன் பின்னர் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மறக்குமா நெஞ்சம்' குறித்தும் அப்டேட் ஒன்று, சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. தாமரை எழுதியுள்ள இந்த பாடலை, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானே பாடி உள்ளார். முதல் சிங்கிளை போலவே, இந்த பாடலும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக, வெந்து தணிந்தது காடு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu next Vendhu thanindhathu kaadu second single released

People looking for online information on AR Rahman, Gautham Vasudev Menon, Marakumaa Nenjam, Raadhika Sarathkumar, Siddhi Idnani, Silambarasan TR, Thamarai, Vendhu Thanindhathu Kaadu will find this news story useful.