சிம்பு - கிருஷ்ணா கூட்டணியில் உருவாகும் பத்து தல.. ஷூட்டிங் குறித்து கிடைத்த சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

Also Read | வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய சிம்பு.. போட்டோவுடன் வந்த செம அப்டேட்!

இதனைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிக்க உள்ள திரைப்படங்கள் தொடர்பாக அடுத்தடுத்து சில அப்டேட்களும் வெளிவந்த வண்ணம் இருந்தது.

அந்த வகையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. முன்னதாக, இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி, மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருந்தது. கிராமத்து பின்னணி மற்றும் வித்தியாசமான சிம்பு லுக் உள்ளிட்டவை, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தந்திருந்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டான 'மஃப்டி' படத்தின் ரீமேக் தான் பத்து தல. இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. தொடர்ந்து, பத்து தல படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் ஷூட்டிங் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, பெல்லாரி பகுதியில் சிம்பு மற்றும் ப்ரியா பவானி சங்கர் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் கௌதம் கார்த்திக் வரும் ஞாயிற்றுக்கிழமை பத்து தல படப்பிடிப்பில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | மேடை அருகே கண்ணீர் விட்ட ரசிகர்.. உடனடியா துல்கர் செய்த விஷயம்.. வைரல் சம்பவம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Simbu next pathu thala shooting update sources

People looking for online information on Silambarasan TR, Simbu Next movie pathu thala shooting will find this news story useful.