கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிம்பு நடித்திருந்த 'மாநாடு' திரைப்படமும் சிறந்த படங்களில் ஒன்றாக உருவாகி இருந்தது.
நீண்ட நாளுக்கு பின், சிம்பு நடிப்பில் அனைத்து விதமான மக்களையும் கவரும் வகையில், மாநாடு திரைப்படம்.அமைந்திருந்தது.
டைம் லூப் கதையை கையில் எடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு, எளிய மக்களுக்கும் புரியும் வகையில், மிக நேர்த்தியாக இயக்கி இருந்தார்.
வெந்து தணிந்தது காடு
மாநாடு படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர், அடுத்தடுத்து சிம்பு நடிக்கவுள்ள திரைப்படங்கள் குறித்து அப்டேட் வந்த வண்ணம் இருந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 'வெந்து தணிந்தது காடு' என்னும் திரைப்படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீராஜ் மாதவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். Vels Film International சார்பில், ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, ஏற்கனவே வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பிளாக்பாஸ்டர் படத்தின் ரீமேக்
வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வகையில், தற்போது இதன் படப்பிடிப்பு குறித்து அசத்தல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வரும் பத்து தல திரைப்படத்தில், சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியாபவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த திரைப்படத்தினை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஷிவ ராஜ்குமார் நடிப்பில், கன்னட மொழியில் வெளியாகி இருந்த பிளாக்பாஸ்டர் திரைப்படம் 'மப்டி'. இதன் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'பத்து தல'.
இதன் படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில், மே 6 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தம் 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் சிம்பு, பத்து தல படத்தை தொடர்ந்து, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.