"K.G.F" தயாரிப்பாளர் & சுதா கொங்கரா இணையும் புதிய படம்.. ஹீரோ இந்த தமிழ் நடிகரா? சம்பவம் இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா - KGF தயாரிப்பாளர்கள் இணையும் படம் பற்றிய பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'மாவீரன்' படத்தின் முக்கிய உரிமை.. மிகப்பெரிய விலைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்! மாஸ்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருந்தது.

ஹோம்பாலே பிலிம்ஸ் ஏற்கனவே கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தை தயாரித்தது. தற்போது பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன்  சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தை அறிவித்தது.

அந்த அறிவிப்பில், "சில உண்மைக் கதைகள் சொல்லப்படுவதற்கும், சரியாகச் சொல்லுவதற்கும் தகுதியானவை. நாங்கள், ஹோம்பலே பிலிம்ஸ் இயக்குனர் சுதா கொங்கராவுடன் எங்கள் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
எங்கள் எல்லாப் படங்களிலும் இருப்பதைப் போலவே இந்தியாவின் கற்பனையை நாம் கைப்பற்றும் ஒரு கதை இது" என அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சிலம்பரசன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்பு தற்போது பத்து தல படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளன. அதே போல இயக்குனர் சுதா கொங்கரா, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்கி வருகிறார். இந்த படத்தையடுத்து சுதா கொங்கரா - சிம்பு இணையும் இந்த புதிய படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | 'துணிவு' பட பேங்காக் படப்பிடிப்பு.. BIGGBOSS அமீர் வெளியிட்ட வைரல் PHOTO! கூட இவங்க வேற இருக்காங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

Simbu next joining hands with Sudha Kongara KGF producer

People looking for online information on KGF Producer, Silambarasan TR, Simbu next movie updates, Sudha Kongara will find this news story useful.