"ஒரு நாளைக்கு ஒரு ரூபா ” “தட்டுனா தமிழ் மட்டுமே” ... சிம்பு நடிப்பில் வைரல் ஆகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் கால்பதித்துள்ள ஆஹா ஓடிடிக்கு தூதுவராக சிம்புவும் அனிருத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | சிவகுமார் வீட்ல டீ, காபி கிடைக்காது.. இதான் கிடைக்கும்.." - Oh My Dog விழாவில் விஜயகுமார்!

முதல்வர் முன்னிலையில் அறிமுகம்….

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் தமிழ் தளத்தை  துவங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆஹா தமிழ் தளத்தை துவங்கி வைத்தார். ஆஹா தமிழ் தளத்தின் துவக்க விழாவில், தமிழ் சினிமாவின் நாயகர்கள் S.P.முத்துராமன், பாரதிராஜா, தெய்வத்திரு AV மெய்யப்பன், தெய்வத்திரு கே பாலசந்தர், தெய்வத்திரு M.S.விஸ்வநாதன் அவர்கள்,தெய்வத்திரு SP பாலசுப்ரமணியம், மற்றும் தெய்வத்திருமதி ஶ்ரீதேவி ஆகியோருக்கு, அவர்களது தமிழ்சினிமா அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் “ கலைஞர் பெருமை” என்ற விருதை தமிழக முதல்வர் மற்றும் ஆஹா முதன்மை நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர்.

அடுத்தடுத்த வெளியீடுகள்…

ஆஹா ஓடிடி தளத்தில், இயக்குனர் வெற்றிமாறனின் பேட்டைக்காளியுடன், பிரியாமணி நடித்துள்ள பாமா கலாபம், அம்முச்சி 2, ரமணி vs ரமணி 3 என மிகப்பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தியேட்டரில் வெளியான ஜீவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடித்துள்ள செல்ஃபி, ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன், கார்த்தி நடித்துள்ள சர்தார், வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என பெரிய திரைப்படங்களும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் வெளியாக உள்ளன. ஆஹா தமிழ் தளத்தைப் பிரபலபடுத்தும் விதமாக பிராண்ட் அம்பாசிட்டராக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சிம்பு நடிப்பில் ‘ஆஹா’ வீடியோ…

இந்நிலையில் சிம்பு ஆட்டோ ஓட்டுனராக நடித்துள்ள ஆஹா தளத்துக்கான ப்ரமோஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் மட்டுமே கொண்டு ஆஹா தமிழ் ஓடிடி தளம் உருவாகியுள்ளதாகவும், ஆண்டு சந்தா ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் 365 ரூபாய் மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கலர்புல்லாக வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது. ஆஹா ஓடிடி ஏற்கனவே தெலுங்கில் முன்னணி ஓடிடி நிறுவனமாக இருக்கும் நிலையில் இப்போது தமிழில் கால்பதித்திருப்பது குறிப்பிடத்தகக்து.

Also Read | ”இந்த வருஷம் வேற மாதிரி இருக்கப் போகுது”… சமந்தாவின் ‘தெறி’ workout வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Simbu new video about aha ott in tamil

People looking for online information on Aha OTT, SilambarasanTR, Simbu, Simbu new video will find this news story useful.