சிம்புவின் 'மஹா' படம் ஓடிடியிலா? கோர்ட் வரை சென்ற இயக்குநர்!.. என்ன தான் பிரச்சனை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்த திரைப்படம் மஹா.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் 4 வருடங்களாக வராததால், இதுபற்றி ரசிகர்களுக்கு அறிவித்த இப்படத்தின் இயக்குநர் ஜமீல், ரசிகர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த படத்துக்கான பணிகள் நடக்கின்றன. சில நாட்களில் நல்ல தகவல் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-ல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இயக்குநர் U.R.ஜமீல். விரைவில் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கதையில் விமான பணிப்பெண்ணாக வரும் ஹன்சிகா பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார் என்றும், இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுவதை அடுத்து அதனை கதாநாயகி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை என்றும் கூறியுள்ள இயக்குநர் ஜமீல்,  தனது இந்த கதைக்கருவை மாற்றி அமைத்து தனக்கு தெரியாமல் முழு படத்தையும் முடித்து ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முயற்சிப்பதாகவும், எனவே இப்படத்தை தயாரிப்பு தரப்பு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், தனது உதவி இயக்குநரை வைத்து படமாக்கியதாகவும், தனக்கு முழு சம்பளத்தை தரவில்லை என்றும் அத்துடன் இந்த செயலுக்காக இழப்பீடு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மே 19-ஆம் தேதி பதில் அளிக்க படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ: 'தல' அஜித் செய்த நெகிழ வைக்கும் காரியம்! மக்கள் தொடர்புத்துறையின் அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Maha UR Jameel filed case againt OTT release

People looking for online information on Hansika Motwani, Maha, Silambarasan TR, U R Jameel will find this news story useful.