'சிம்பு'வின் மாநாடு ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யா.. என்ன ரோல் தெரியுமா? தெறிக்கும் ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விருந்தாக அண்மையில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

Simbu Maanaadu SJ Surah Viral shooting spot still

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. அந்த படத்தில் சிம்பு தமது உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் வேற லெவலில் தோன்றி கிராமத்து இளைஞராக லுங்கியெல்லாம் கட்டி பட்டையை கிளப்பி நடித்திருந்தார்.

இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என சிம்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் காட்சிகள் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

கல்யாணி ப்ரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் டீசரை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி அனுராக் காஷ்யப் வெளியிட்டிருந்தார். இதனிடையே சிம்பு பிரேம்ஜி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி வரும் விஜய் டிவி புகழ் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடிப்பதாக தெரிகிறது.

புகழ் சிம்புவுடன் பேசும்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலாகியது. இந்நிலையில் தான் இப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியுடன் படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் உடையில் நின்று பேசும் புகைப்படமும் அதிரவைத்து வருகிறது.

எஸ்.ஜே.சூர்யா அண்மையில் தான் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.

ALSO READ: ‘நீங்க சொல்றதலாம் கேக்க நான் ஒன்னும் உங்க கட்சி தொண்டன் இல்ல!’ - ஓடிடியில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு! தேதியுடன் வெளியான டிரெய்லர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Maanaadu SJ Surah Viral shooting spot still

People looking for online information on Silambarasan TR, Sj suryah, Suresh Kamakshi, Venkat Prabhu will find this news story useful.