"கடவுள் இருக்கார்!!".. சிம்புவின் மாநாடு ரிலீஸ் .. கடைசி நேர பரபரப்பு.. வெங்கட் பிரபு தெறி ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் மாநாடு.

Simbu maanaadu release confirmed venkat prabhu viral tweet
Advertising
>
Advertising

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், வரும் நவ-25ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Simbu maanaadu release confirmed venkat prabhu viral tweet

ஆனால் எதிர்பாராத விதமாக, மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நவ.25-ஆம் தேதி வெளியாகாது என சுரேஷ் காமாட்சி கடைசி நேரத்தில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்த தமது ட்வீட்டில்,  “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்!” என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. அதன்படி இப்பட வெளியீட்டு பிரச்சனை நவ.24-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குள் சுமூக முடிவுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், பட வெளியீடு மீண்டும் உறுதியாகியுள்ளது. இதை அறிவிக்கும் வகையில் மாநாடு பட இயக்குநர் வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், “கடவுள் இருக்கார் குமாரு!” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் & நடிகர் மனோபாலா,  “க்ரீன் சிக்னல்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சென்னையின் பிரபல ரோஹிணி திரையரங்கில் முன்னதாக புக் செய்யப்பட்ட 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீண்போகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu maanaadu release confirmed venkat prabhu viral tweet

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Suresh Kamatchi, V House Productions, Venkat Prabhu will find this news story useful.