"கோ படத்துல சிம்புவா?".. ஜீவா நடித்த அதே காட்சிகளில்.. இணையத்தில் பரவி, தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்த்திகா மற்றும் பலர் நடித்து 2013 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கோ.

இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்த இந்த கதை ஏகப்பட்ட திருப்பங்கள் நிறைந்த சுவாரசியமான திரைப்படமாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை பல முன்னணி நடிகர்களைக் கொண்டு இயக்கிய இயக்குநர் கே.வி.ஆனந்த், அண்மையில் மரணம் அடைந்தார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மரணமடைந்த கே.வி.ஆனந்த் மறைவு பலரிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பலரும் கே.வி.ஆனந்த் மறைவு குறித்து இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அந்த நேரத்தில் இரங்கல் தெரிவித்த நடிகர் சிம்பு, கோ திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அடுத்து ஒரு படம் பண்ணுவதற்கான கதையை கே.வி.ஆனந்த் தன்னிடம் கூறியிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ‘கோ’ திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கும், யாரும் பார்த்திராத சில புகைப்பட காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தில் வரும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தின் காட்சியில்தான் சிம்பு, அஜ்மல் அமீர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன.

இதன் இன்னொரு ஸ்டில்லில் சிம்பு, கார்த்திகா இடம்பெறும் புகைப்படமும் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

ALSO READ: "தன் பட புரொமோஷனுக்கு அவர் மட்டும் தான் வந்தாரு..".. பிரபலங்கள் உருக்கம்.. இறுதி அஞ்சலி Video!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu in KVAnand Ko Movie instead of Jiiva viral stills trending

People looking for online information on Harris Jayaraj, Jiiva, K.V.Anand, KV Anand, Silambarasan TR will find this news story useful.