THE WAIT IS OVER… சிம்பு, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’… ரிலீஸ் தேதியுடன் வெளியான LATEST போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ள ஹன்சிகாவின் 50 ஆவது படமான மஹா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Simbu hansika maha movie release date announced
Advertising
>
Advertising

ஹன்சிகா…

தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதற்கடுத்து வரிசையாக அவர் நடித்த படங்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அது போலவே தெலுங்கு சினிமாவிலும் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்தார்.

Simbu hansika maha movie release date announced

ஹன்சிகா 50…

நடிகை ஹன்சிகா தற்போது தனது 50வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘மஹா’என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளது. இது ஒரு திகில் படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஜமீல் இயக்கியுள்ளார். அப்துல் மாலிக் தயாரித்துள்ளார். சிம்புவும் ஹன்சிகாவும் ஏற்கனவே வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மஹா ரிலீஸ் தேதி…

மஹா படம் தொடர்பாக சிம்பு, ஹன்சிகா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த படம் ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்தாலும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. இந்த படம் தொடர்பான  நீதிமன்ற வழக்கு பிரச்னைகள் எல்லாம் சுமூகமாக முடிந்த நிலையில் ’மஹா’ இப்போது ரிலீஸூக்கு தயாராக உள்ளது. வரும் ஜூன் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்போடு புதிய போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சிம்புவால் கூடிய எதிர்பார்ப்பு…

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் அடுத்து உருவாகி வருகிறது. இதற்கிடையில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாக இருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

THE WAIT IS OVER… சிம்பு, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’… ரிலீஸ் தேதியுடன் வெளியான LATEST போஸ்டர் வீடியோ

Tags : Mahaa, Hansika

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu hansika maha movie release date announced

People looking for online information on Hansika, Mahaa will find this news story useful.