"அந்த உடல்களை பார்த்ததும் ஏன் பயந்தாய்? அவசரப்பட்டுட்டியே..".. ரசிகரின் மறைவு.. சிம்பு இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலம் சிம்பு ரசிகர்களிடையே இளம் ஹீரோவாக ரிஜிஸ்டராக தொடங்கியதில் இருந்தே அவருக்கு தீவிர ரசிகராக இருந்து வந்தவர் குட்லக் சதீஷ்.

இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த குட்லக் சதீஷ், சிகிச்சை பலனின்றி காலமானார். குட்லக் சந்தீஷ் எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. குட்லக் சதீஷ் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான இரங்கல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில்,  “அன்பு தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரருமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்து இருக்கிறேன். கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கு எல்லாம் பேசி, நம்பிக்கையோடு மீண்டு வருவாய் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேனே..?! அங்கு எடுத்துப் போகும் உடல்களை பார்த்ததும் பயந்தது ஏன் சகோதரா? பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது ஏன் சகோதரா? உன் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனதேன் சகோதரா? துயர் கொள்கிறேன்.

உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டுவிட்டாய்... போய் வா சகோதரா. அழுகையோடு வழி அனுப்பி வைக்கிறேன். ரசிகர்களே.. நண்பர்களே.. சகோதர சகோதரிகளே.. நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலைகுலையாதீர்கள். பயம் தான் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாவதை தடுக்கிறது. சாதாரண நோயை தீவிர நோய் ஆக்குவதும் பயம்தான். நிலைகுலைதல் தான் இதயத்தை தாக்குகிறது. தயவு செய்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்.

நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதே சமயம் மனதிடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருத்துவம் பார்ப்பதோடில்லாமல் தேவையற்று வெளியே செல்வதைத் தவிர்ப்போம். இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து என புரிந்துகொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை. வருத்தங்களுடன் முடிக்கிறேன்.” என சிம்பு உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: சோகத்தை ஏற்படுத்திய 'மற்றுமொரு' நகைச்சுவை நடிகரின் மரணம்!.. திரைத்துறையினர் அதிர்ச்சி!!

தொடர்புடைய செய்திகள்

Simbu deep condolence for his fan good luck sathish demise

People looking for online information on Silambarasan TR will find this news story useful.