எஸ் ஜே சூர்யா & யாஷிகா ஆனந்தின் ’கடமையை செய்’…. SURPRISE கொடுத்த சிம்புவின் நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள கடமையை செய் திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கமலின் சூப்பர் ஹிட் படத் தலைப்பில் சதீஷின் அடுத்த படம்… சிம்பு வெளியிட்ட exciting போஸ்டர்!

வாலியும் குஷியும்…

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் வெற்றியும் அவரை முன்னணி இயக்குனராக்கியது. குஷி படத்தை அவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். இன்றளவும் இந்த இரு படங்களும் அவரின் பேர் சொல்லும் படங்களாக உள்ளன.

இயக்கத்தில் இருந்து நடிப்பு…

குஷி படத்துக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து நியூ என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். இரு மொழிகளிலும் கதாநாயகியாக சிம்ரன் நடித்தார். அந்த படம் பெற்ற கவனிப்பை அடுத்து தொடர்ந்து அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். இதையடுத்து அவர் நடித்த இறைவி படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஹீரோ வில்லன் ரெண்டும் நானே…

விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனத்தைப் பெற்றார். அதே நேரத்தில் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றார். சிம்புவுடன் அவர் நடித்த மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்போது பொம்மை, கடமையை செய் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

கடமையை செய் ரிலீஸ்…

யாஷிகா ஆனந்தோடு எஸ் ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் உலக திரையரங்க விநியோக சிம்புவின் தந்தை  டி ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்துக்கு பிறகு இந்த படத்தில் சிம்பு மறுபடியும் எஸ் ஜே சூர்யாவோடு கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

”மனச அங்கயே இருக்கு”… இன்னும் மறக்க முடியல போல…. திவ்யபாரதி வைரல் போஸ்ட்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu cine arts will release S J suryah kadamayai sei movie

People looking for online information on Kadamayai sei movie, S J Suryah, S J suryah kadamayai sei movie, SilambarasanTR, Simbu Cine Arts, Venkat Ragavan, Yashika Aannand will find this news story useful.