சிம்பு அனிருத் பகிர்ந்த ’தமிழால் இணைவோம்’… வைரலாகும் TWEETS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரை பிரபலங்களான அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் பகிர்ந்த தமிழால் இணைவோம் டிவீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Simbu and anirudh viral tweets as tamilconnects
Advertising
>
Advertising

20 years of imman: தமிழன் to அண்ணாத்த… ‘மாஸும் கிளாஸும்’ கலந்த பயணம்- இயக்குனர் வாழ்த்து

தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர்  ஏ ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். அடுத்தடுத்து அவர் இசையமைத்த ஜெண்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் பாடல்கள் இந்தியா முழுவதும்ம் வெற்றி பெற்றன. இதையடுத்து அவரை இந்திப் பட உலகில் நுழைந்தார். தமிழ் படங்களுக்கு நிகராக பல இந்தி படங்களுக்கும் இசையமைத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். 90 களில் வெளியான தில்சே, ரங்கீலா போன்ற இந்தி படங்களும் 2000 களுக்குப் பிறகு வெளியான ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகிய படங்களும் ரஹ்மானின் பேர் சொல்லும் படங்களாக அமைந்தன.

Simbu and anirudh viral tweets as tamilconnects

ஆஸ்கர் மேடை…

இந்திய சினிமாவின் அடையாளங்களுள் ஒருவராக இருப்பவர் ஏ ஆர் ரஹ்மான். தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2009 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்று உலகம் முழுவதும் கவனம் பெற்றார். ஆஸ்கர் மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என தமிழில் பேசி அசத்தினார். உலகம் முழுவதும் பல நாட்டு படங்களில் பணியாற்றும் ரஹ்மான் இப்போது உலகம் முழுவதும் அறியப்படும் இசைக் கலைஞராக உள்ளார்.

ரஹ்மான் பகிர்ந்த ஓவியம்..

இந்நிலையில் சமீபத்தில் ஓவியர் மற்றும் ரைட்டர் படத்தின் இணை எழுத்தாளரான ’சந்தோஷ் நாராயணன்’ வரைந்த, பாரதி தாசனின் "இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்" எனும் வரிகள் பதித்த ழகரம் ஏந்திய தமிழணங்கு எனும் ஒரு ஓவியத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து பலரும் அந்த ஓவியத்தைப் பகிர அது இணையத்தில் வைரலானது.

தமிழ்தான் இணைப்பு மொழி….

அதன் பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா ‘இந்தி இந்தியாவின் இணைப்பு மொழி’ என்று கூறியது சம்மந்தமாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி’ என்று கூறியிருந்தார். ரஹ்மானின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்தன. பலரும் ரஹ்மானை சமூகவலைதளத்தில் விமர்சிக்க இப்போது திரையுலகில் இருந்து அவருக்கு ஆதரவு எழ ஆரம்பித்துள்ளது.

தமிழால் இணைவோம்…

தமிழ் சினிமாக் கலைஞர்கள் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ’தமிழால் இணைவோம்’ என டிவீட் செய்து “Tamilconnects” என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். முன்னணிக் கலைஞர்களான சிம்பு மற்றும் அனிருத் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஒரே மாதிரி ட்வீட் செய்ய இணையத்தில் இப்போது அந்த ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

’பீஸ்ட்’ Team-க்கு வாழ்த்து சொன்ன ‘தளபதி 66’ நடிகர்!... வைரலாகும் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Simbu and anirudh viral tweets as tamilconnects

People looking for online information on Anirudh, AR Rahman, SilmabarasanTR, Simbu, Simbu and anirudh viral tweets will find this news story useful.