தெறிக்கும் இசை.. அனல் பறக்கும் ஸ்டெப்.. வெளியானது 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ SONG..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள ராவடி பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

பத்து தல

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ராவடி

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆக்ஷன் மற்றும் மாஸ் வசனங்கள் என டிரெய்லரே மிரட்டலாக அமைத்திருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ராவடி பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இசைப்புயலின் தெறியான இசையும், சாயிஷாவின் அனல் பறக்கும் ஸ்டெப்களும் என இந்தப் பாடல் பட்டாசாக வெளிவந்திருப்பதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் இப்போதே வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Simbhu starrer Pathu thala Movie Raawadi video song Released

People looking for online information on Pathu Thala, Raawadi will find this news story useful.