சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் பத்து தல படத்தின் வேற லெவல் அப்டேட்! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. 2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் படப்பிடிப்பில் இணைந்து கொண்டதையும் அறிவித்துள்ளனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Simbhu gautham karthik paththu thala movie shooting update

People looking for online information on Gautham Karthik, Simbhu will find this news story useful.