"சில்லுனு ஒரு காதல்' படத்தை 2022ல எடுத்தா பட்ஜெட் ரூ 110 கோடி".. - தயாரிப்பாளர் சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் திரைப்படமாகும்.

Advertising
>
Advertising

இந்த படத்தை என். கிருஷ்ணா இயக்கினார். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர், ஷ்ரியா சர்மா, சுகன்யா, வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார், கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. படத்திற்கான ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் ISC மற்றும் படத்தொகுப்பை ஆண்டனி கையாண்டனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 8 செப்டம்பர் 2006 அன்று படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் பூமிகா சாவ்லா.

இப்படத்திற்கு முதலில் ஜில்லுனு ஒரு காதல் என்று பெயரிடப்பட்டது, பின்னர் அது தூய-தமிழ்ப் பெயரைப் பெறுவதற்காக சில்லுனு ஒரு காதல் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமை கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், இந்தத் திரைப்படம் மராத்தியில் து ஹி ரே என ரீமேக் செய்யப்பட்டது, இதில் ஸ்வப்னில் ஜோஷி, சாய் தம்ஹங்கர், தேஜஸ்வினி பண்டிட் ஆகியோர் நடித்தனர் மற்றும் சஞ்சய் ஜாதவ் இயக்கினார்.

இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரத்யேகமாக பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தற்போதைய தமிழ் சினிமா சூழலில் சில்லுனு ஒரு காதல் படத்தை எடுக்க 110 முதல் 120 கோடி ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் இந்த படத்தை 9.30 கோடி ரூபாய்க்கு தயாரித்ததாகவும் கூறியுள்ளார். இந்த 9.30 கோடி ரூபாயில் சூர்யா- ஜோதிகா - பூமிகா - வடிவேல் ஆகியோரின் சம்பளமும், A.R. ரஹ்மான், ராஜசேகர், ஆண்டனி, கிருஷ்ணா உள்ளிட்டோரின் சம்பளமும் அடக்கம் என கூறியுள்ளார்.

"சில்லுனு ஒரு காதல்' படத்தை 2022ல எடுத்தா பட்ஜெட் ரூ 110 கோடி".. - தயாரிப்பாளர் சூப்பர் தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sillunu Oru Kadhal Movie Adjusted Budget Studio Green

People looking for online information on A R Rahman, Bhoomika, Jyothika, Sillunu Oru Kaadhal, Suriya will find this news story useful.