'சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தவர் ஷ்ரியா ஷர்மா . அந்த படத்தின் பாடல்கள், காதல் காட்சிகள் என இன்றளவும் ரசிகர்களால் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஷ்ரியா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தனது நடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது சில்லுனு ஒரு காதல் பட அனுபவம் குறித்து பேசிய அவர், அந்த படத்தில் கல்லூரி மாணவராக வரும் சூர்யாவை மிகவும் பிடிக்கும் என்றும் இறுதிகாட்சிகளில் ஜோதிகாவின் நடிப்பு பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்திற்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த நடிகை மீனாவை சுட்டிக்காட்டினார்.