SILK: என்னா ஸ்டைலு.. "பேசுனாவே பாடுற மாரி".. மிஸ் யூ சில்க்.. வெறித்தனமான DANCE .. வைரல் THROWBACK வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

silk smitha: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் 80-கள் மற்றும் 90-களில் லட்சோப லட்சம் ரசிகர்களை அள்ளியவர் நடிகை சில்க்.

Advertising
>
Advertising

நடிகை சில்க்

வெகுமக்கள் ரசனைக்கு மட்டுமல்லாமல் திரைத்துறையினர் ரசனைக்கும் உரிய பேரழகு நடிகையாக அக்காலக் கட்டத்தில் திகழ்ந்தவர் நடிகை சில்க். முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் சில்க் நடித்த காட்சிகளை இன்றும் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய திலகம் பிரபு, இயக்குநர் கே.பாக்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார் சில்க்.

ஆடையும் ஆடலும்..

கதாபாத்திரங்களாக மட்டுமின்றி, சிறப்பு தோற்றங்களில், குறிப்பாக ஒரு பாடலுக்கு மட்டும் சில்க் நடமாடினால், அந்த பாடல் மட்டும் அல்லாமல் அந்த படமே ஹிட் என்கிற அளவுக்கும் கூட ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு வரவேற்பும் சில்க்குக்கு இருந்தது. அதிலும் ஒவ்வொரு பாடலிலும் படத்திலும் சில்க்கின் விதவிதமான் ஆடைகளே ரசிகர்களின் தனித்த கவனத்தை பெறும்.

சில்க் .. களைகட்டிய கச்சேரி

அப்பேர்ப்பட்ட சில்க்கின் திடீர், மரணம் யாருமே எதிர்பாராதது என்றாலும் அவரை நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ணுகிறார்கள் என்று சொல்லலாம். இந்தநிலையில் சில்க் பங்கேற்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சில்க் ஒரு கச்சேரியில், அமரன் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

ஸ்டைல் சில்க்..

முன்னதாக சில்க்கை வரவேற்கும் பாடகர் மலேசியா வாசுதேவன், அவரிடம் பேசுகிறார். அந்த ஸ்டேஜுக்கு அமரன் பட பாடல் காஸ்டியூமுடன் சில்க், ஸ்டைலாக வந்து, அதே ஸ்டைலில் மலேசிய வாசுதேவனிடம் பேசி அசத்தி, பின்னர் முழு எனர்ஜியுடன் டான்ஸ் ஆடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கிளாசிக் காவியம்..

இதை பார்த்த ரசிகர்கள், சில்க் ஒரு மறக்க முடியாத கிளாசிக் காவியம். கவர்ச்சி நடனங்களை தாண்டி, சில்க்கிற்கு திறமைகளும் ஆர்வங்களும் நிறையவே இருக்கின்றன. டஸ்கி நிறத்தழகி சில்க் போல் இன்னொருவர் இந்திய சினிமாவுக்கு கிடைப்பது அரிது என்று கண்ணீர் மல்க கமெண்ட்களில் கூறிவருகின்றனர்.

சூராங்கனி பாடல்..

ஏற்கனவே சில்க் சூராங்கனி பாடலை பாடக்கூடிய ஒரு த்ரோபேக் வீடியோவும் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. சொந்த குரலில் பேசுவதிலேயே, ரசிகர்கள் உருகிக் கேட்கும் அளவுக்கு காந்தக்குரல் கொண்டவர் சில்க், அவர் பாட்டு பாடினால் எப்படி இருக்கும் என்று சொல்லி அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உருக்கமாக பேசிவந்தனர். இந்நிலையில் தான் நடிகை சில்க் பங்கேற்று நடனம் ஆடிய இந்த த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read: பெண் காவலர்களின் சீருடைக்கு அளவெடுத்த ஆண் ஊழியர்கள்.. பரபரப்பு வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை?

தொடர்புடைய இணைப்புகள்

Silk smitha style speech viral dance throwback video

People looking for online information on Silk Smitha, Silk smitha throwback video, Silk smitha viral dance video will find this news story useful.