STR48: புது லுக்கில் தலைவன் சிம்பு?.. தீயாய் பரவும் பட இயக்குனர் வெளியிட்ட வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

STR48: நடிகர் சிம்புவின் புதிய லுக் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை சிலம்பரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து நடிகர் & தயாரிப்பாளர் கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, "எனது திரைக்கதையை ஏற்றதற்கும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி சிலம்பரசன் சகோ. முதல் நாளில் இருந்து நம்பமுடியாத வகையில் எனக்கு உதவிகரமாக இருந்தீர்கள். கடவுளுக்கு நன்றி" என ட்வீட் செய்துள்ளார். மேலும் சிம்புவுடன் தான் இருக்கும் புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் சிம்பு நீண்ட முடியுடன், சால்ட் & பெப்பர் லுக் தாடியுடன் தோற்றமளிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR with Desingh Periyasami STR48 New Look Image

People looking for online information on Desingh Periyasamy, Silambarasan TR, STR48 will find this news story useful.