ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல' படம் பார்த்த சிம்பு.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பழங்கால பேருந்தில் பயணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. லால் சலாம் படத்தின் வைரல் BTS போட்டோஸ்

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  நேற்று முன்தினம் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் சிம்பு, ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல'படத்தினை சிறப்பு காட்சியில் படக்குழுவினர் உடன் கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிம்புவுடன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,  இயக்குனர் கிருஷ்ணா, தனஞ்செயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read | சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி நடிக்கும் புதிய படம்.. என்ன மாதிரியான கதைக்களம்? SK சொன்ன பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR watching Pathu Thala Movie Viral Photo

People looking for online information on Pathu Thala, Pathu Thala Movie, Silambarasan TR will find this news story useful.