தமிழ் நாட்டில் 'வெந்து தணிந்தது காடு' படம் ரிலீசாகும் திரையரங்க விவரங்கள் வெளியாகி உள்ளன.
Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. படத்தில் வில்லனாக பிரபல முன்னணி இயக்குனரா? சூப்பர் COMBO-ல இது!
வெந்து தணிந்தது காடு படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் நேரடியாக வெளியிட்டுள்ளது.
தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக திரையரங்க விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 84 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 64 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி ஏரியாவில் 43 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 63 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 78 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 41 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 51 திரையரங்குகளிலும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு இந்திய அரசின் சென்சார் போர்டு
U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | 'வெந்து தணிந்தது காடு' படத்தில் 'நாயகன்' வேலு நாயக்கர்.. அப்புறம் இவர் வேற இருக்காரா? செம்ம